ஆடை இறக்குமதியை நிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம்!
Tuesday, June 16th, 2020
கைத்தறி மற்றும் பற்றிக் ஆடை இறக்குமதியை நிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
குறித்த தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காகவும் புதிய உற்பத்தியாளர்களை ஈர்ப்பதற்காகவும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
தென்னை மரங்களை வெட்ட பிரதேச செயலாளரின் அனுமதி பெறுவது அவசியம் –- தெங்கு, கித்துள், பனை தொடர்பான இராஜ...
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் மாணவர்களுக்கு இன்றுமுதல் விடுமுறை!
காலத்திற்கு ஒவ்வாத நிர்வாக முறைமை காரணமாக முற்போக்கான தலைமைத்துவம் செயற்பட முடியாத நிலை காணப்படுகின்...
|
|
|


