ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க ஓய்வுபெற்றவர்களுக்கு நியமனம் – அமைச்சர் அகிலவிராஜ் !

Sunday, June 24th, 2018

தமிழ் மொழிமூலமான பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் நிவத்திகல கல்வி கோட்டத்தில் தேல தமிழ் மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை உள்ளதா? அத்துடன் பொதுவாக நாடளாவிய ரீதியிலும் தமிழ் மொழி மூலமான பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாக ஹேசான் விதானகே கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவிக்கையில் –

குறித்த பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் தமிழ் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. பொதுவாக வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகளவில் ஆசிரிய சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏனைய பகுதிகளில் பெரும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்ப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம். அதனைத் தவிர வேறு வழியில்லை.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தோரையும் நாம் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். இனிவரும் காலங்களில் இருக்கும் அனைத்து வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.

Related posts: