ஆசிரியர் சேவையில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு – அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!
Wednesday, February 15th, 2017
இலங்கை ஆசிரியர் சேவையுடன் தொடர்புடைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கென சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு அமைச்சரவைப் பத்திரங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தன்னார்வ, சமயாசமய, ஒப்பந்த அடிப்படைகளில் பணியாற்றும் சிவில் பாதுகாப்புத்துறை அதிகாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஆசிரியர் ஆலோசனை சேவையை ஏற்படுத்துவதற்கான பிரமாணமும், விளையாட்டு மற்றும் ஆசிரியர்களின் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய 3868 விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டமை இதில் முக்கிய அம்சமாகும்.

Related posts:
73 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கும் சவுதி அரேபியா!
முச்சக்கரவண்டிகளின் ஆரம்ப கட்டணம் 80 ரூபாய் வரை அதிகரிக்கும்?
இடைக்கால குழுவை நியமிப்பதற்கான முடிவை மாற்றிக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழுத்தம் பிரயோகி...
|
|
|


