ஆசிரியர் இடமாற்ற கொள்கையை நடைமுறைப்படுத்த தமிழர் ஆசிரியர் சங்கம் பின் நிக்கிறது இலங்கை ஆசிரியர்சேவை சங்கம் குற்றச்சாட்டு!

Sunday, July 5th, 2020

தேசிய கொள்கைகளில் ஒன்றான ஆசிரியர் இடமாற்ற கொள்கையை அங்கீகரித்த தமிழர் ஆசிரியர் சங்கம் வடக்கில் ஆசிரியர் இடமாற்ற கொள்கையை நடைமுறைப்படுத்த அதிகாரிகளோடு சேர்ந்து பின்னிக்கிறது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது .

இதுதொடரபில் மேலும் தெரியவருவதாவது –  இலங்கையில் 69 க்கு மேற்பட்ட ஆசிரியர் சங்கங்கள் காணப்படுகின்ற நிலையில் வினைத்திறனான அதிகமான அதிபர்கள் ஆசிரியர்களை உள்ளடக்கிய சங்கமாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் விளங்குகின்றது.

வடக்கின் கல்வி  நிலையை வீழ்ச்சி நிலையிலிருந்து மீட்பதற்கு  எவ்விதமான  நிலையான கொள்கைகளும் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படாமல் இருப்பது மனவேதனையை உண்டுபண்ணுகிறது. கல்விக்கான தேசிய கொள்கைகளில் ஒன்றாக கருதப்படும் ஆசிரியர் சேவையின் தேசிய இடமாற்று கொள்கையை வடக்கு மாகாணம் அங்கீகரிக்காமல் இருப்பது அதிபர் ஆசிரியர்கள் மத்தியில் மன உளைச்சலுக்கு வித்திடுவதோடு மாணவர்களின் பெறுபேறுகள் குறைவதற்கும் ஒரு காரணமாக அமைகிறது. 

வடக்கில் ஆசிரிய சேவையி 80 வீதமானவர்கள்  பெண்களாக காணப்படுகின்றின்ற நிலையில் அவர்கள் சேவையாற்றும் அதி கஸ்ரப் பிரதேசங்களுக்கு   உரிய போக்குவரத்து ஒழுங்குகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் செய்து கொடுக்கப்படுவதில்லை. வடக்கு மாகாணத்தில் மனித வலு மற்றும் பொதீவலுக்கள் முறையாக பயப்படுவத்தாதன் காரணமாக வடக்கு  கல்வி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுத்துகிறது . கல்விக்கான தேசிய கொள்கைகளை அங்கீகரித்த தமிழர் ஆசிரியர் சங்கம் தீர்மானங்கள் நிறைவேறும் போது குழப்புவது இனவாத அடிப்படையில் செயற்படுவதும் வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கு காரணமாக அமைகிறது.

குறிப்பாக கடந்த வருடம் இடம்பெற்ற சம்பளப் போராட்டம் பதவி உயர்வுப் போராட்டம் ஆகிய பிரச்சனைகளை முன்னிறுத்தி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் போராட்டங்களை முன்னெடுத்த போது நமக்கு எதிராக கொடிகளை பறக்கவிட்ட வர்களாக தமிழர் ஆசிரியர் சங்கம் விளங்குகின்றனர் .  வடக்கின் கல்வி தொடர்பிலும் அதிபர் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பிலும் முறையான ஒரு கொள்கையை கொள்கை உருவாக்குங்கள் என வடமாகாண ஆளுநருக்கும் அதிகாரிகளுக்கும் பலமுறை தெரிவித்தும் எந்தப் பயனும் கிட்டவில்லை என அச் சங்கம் மேலும்  கவலை தெரிவித்தது.

Related posts: