ஆசிரியர் – அதிபர்களின் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு – அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
Tuesday, August 10th, 2021
ஆசிரியர், அதிபர்களின் வேதன பிரச்சினையை, உடனடியாக தீர்ப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆசிரியர், அதிபர்களின் பிரச்சினை குறித்து ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாடாளுமன்ற தேர்தல் சுகாதார வழிகாட்டல்களுக்கு சட்டமா அதிபர் அனுமதி!
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பு!
வர்த்தக மாபியாக்கள் விரைவில் கட்டுப்படுத்தப்படுவர் - அமைச்சர் நளின் றுதிபடத் தெரிவிப்பு!!
|
|
|


