ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பற்றாக்குறைக்கு அடுத்த சில வாரங்களில் தீர்வு – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Sunday, July 9th, 2023

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பற்றாக்குறைக்கு அடுத்த சில வாரங்களில் தீர்வை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் மாகாண மட்டத்தில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அதற்கமைய விரைவில் மாகாண மட்டத்தில் கலந்துரையாடுவோம்.

இந்த கலந்துரையாடல் வடமேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு, அதன் பின்னர் மாகாண சபையுடன் இணைந்து மாகாண மட்டத்தில் முழு நாள் நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் இங்குள்ள பாடசாலைகளில் 95 சதவீத பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பற்றாக்குறை இருப்பதை நாம் நன்கு அறிவோம்.

இதற்கமைய பாடசாலைகளுக்கு சுமார் 26,000 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அவர்களில் தமிழ் ஆசிரியர்களும் சிங்கள ஆசிரியர்களும் அடங்குவர் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: