ஆசிரியர்களின் நலன்கருதி வேலைத்திட்டம் –  கல்வி அமைச்சர்!

Saturday, October 7th, 2017

ஆசிரியர் ஆசிரியைகளின் நலன்கருதி கல்வி அமைச்சு பல வேலைத்திட்டங்களை அமுலாக்கி இருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் ஆசிரியர்கள் வழங்கும் சேவையின் பெறுமதியை ஒரு தினத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாதென்று கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , சர்வதேச ஆசிரியர் தினம் ஒக்டோபர் ஐந்தாம் திகதி கொண்டாடப்பட்டாலும் ஒவ்வொரு நாடுகளும் தமக்கு ஏற்ற விதத்தில் ஆசிரியர் தினங்களை ஒதுக்கிக் கொண்டுள்ளன. இதன் பிரகாரம் இலங்கைக்கான ஆசிரியர் தினம் ஒக்டோபர் ஆறாம் திகதி கொண்டாடப்படுகிறது.

கடமைக்காக வரும் கர்ப்பிணிப் பெண்களான ஆசிரியைகளுக்கு வசதியான ஆடை அறிமுகம் செய்யப்படும். ஆசிரியர்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு பயிற்சிகள் வழங்கப்படும் என புதிய ஆசிரியர் விடுதிகளும், பயிற்சி நிலையங்களும் நிர்மாணிக்கப்படும். ஆசிரியர், ஆசிரியைகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் திடடமிட்டுள்ளது எனவும் கல்வியமைச்சர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

Related posts: