அஸ்வெசும நலன்புரி திட்டம் – இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன்முதல் வழங்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!
Tuesday, March 12th, 2024
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இந்த மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதற்கமைய சுமார் 2 மில்லியன் பயனாளிகள் அஸ்வெசும கொடுப்பனவுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இரண்டாவது கட்டத்தின் கீழ் அந்த எண்ணிக்கையை 2.4 மில்லியனாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக இந்த ஆண்டுக்கான பாதீட்டில் 205 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இந்திய மீனவர்கள் 99 பேர் விடுதலை
அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல ...
அரசாங்கத்தை விமர்சிப்பது மக்களின் உரிமை - எதிர்ப்பு நடவடிக்கையின் போது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப...
|
|
|


