அஸ்வெசும நலன்புரி திட்டம் – புதிய பயனாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களை கோரும் திகதி அறிவிப்பு!
Friday, January 19th, 2024
அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களை கோரும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி முதல் வாரத்தில் புதிய பயனாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் மேலும் 300 ஆயிரம் குடும்பங்களை இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதுவரை கிடைத்துள்ள 604 ஆயிரம் அஸ்வெசும மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கோட்டையைச் சுற்றியுள்ள அகழி துப்பரவாக்கப்படுகிறது!
தொலைபேசிகளை கண்டுபிடிப்பதற்கு புதிய நடைமுறை அறிமுகம்!
இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
|
|
|


