அஸ்வெசும திட்டத்த்திலுள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் முக்கிய கலந்துரையாடல்!
Thursday, July 27th, 2023
அஸ்வெசும திட்டத்தை அமுல்படுத்தும் போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் நேற்றையதினம் இடம்பெற்றது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகளை வழங்குதல் மற்றும் எழுந்துள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பது தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, அரச நிர்வாக செயலாளர் ரஞ்சித் அசோக, அஸ்வெசும திட்டத்தின் தலைவர் பி. விஜேரத்ன உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டடிருநதமை குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
கண்டி வன்முறை தொடர்பில் ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!
அரச மற்றும் தனியார் ஊழியர்களின் பயன்பாட்டிற்காக நாடு முழுவதும் 19 புகையிரதங்கள், 4 ஆயிரம் பேருந்துகள...
அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீடுகள் வழங்கிவைப்பு!
|
|
|


