அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்பு!
Friday, July 28th, 2023
அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வங்கிக் கணக்குகளை இந்த வார இறுதிக்குள் ஆரம்பிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாள்களில், அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பான விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தல் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கும் பணிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.
இதற்கமைய, அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உரிய முறையில் வழங்குமாறும்அறிவித்துள்ளார்.
இதேவேளை, அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பில் தகவல் பெறுவதற்காக எல்ல பிரதேச செயலகத்திற்கு சென்ற நபர் ஒருவர் வரிசையில் காத்திருந்த போது திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
இளம் கர்ப்பிணிப்பெண் படுகொலையை கண்டித்து ஊர்காவற்றுறையில் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து அமைதி ஊர்வலம்!
கல்வித்துறையின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
|
|
|


