மாணவர்கள் பண்பானவர்களாக மிளிரவேண்டும்- யாழ். ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்­பி­ர­காசம்

Thursday, June 9th, 2016

சமூக மட்­டத்தில் மாண­வர்கள் நல்­ல­வர்­க­ளா­கவும் பண்­பா­ன­வர்­க­ளா­கவும் வாழ்ந்து மிளிர வேண்டும் என யாழ்.மறை மாவட்ட ஆயர் அருட்­க­லா­நிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்­பி­ர­காசம் அடி­களார் தெரி­வித்­துள்ளார்

யாழ். ஆயரின் பெயர் கொண்ட திரு­வி­ழாவை முன்­னிட்டு ஆயர்­தின விழா நேற்­றைய தினம் யாழ். மரி­யன்னை பேரால­யத்தில் நடை­பெற்­றது. இதன்­போதே ஆயர் இதனைத் தெரி­வித்தார்

மேலும் அங்கு அவர் தெரி­விக்­கையில்

இன்­றைய சமு­தா­ய­மா­னது திசை தெரி­யாது செல்­கின்ற நிலை உரு­வா­கி­யுள்­ளது. குறிப்­பாக சினிமாப் படங்­களைப் பார்ப்­பதும் அதில் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற அடி­தடி சண்­டை­களைப் பார்த்து அதனை சமூ­கத்தில் செய்­கின்ற பண்பாகவே காணப்­ப­டு­கின்­றது. ஆனால் அதே சினிமா பாணியில் அத்­த­கைய குற்றச் செயல்­க­ளுக்கு வழங்கப்படுகின்ற தண்­ட­னை­களை இளைஞர் சமு­தாயம் கண்­டு­கொள்­வ­தில்லை

இத­னா­லேயே தான் சமு­தா­யத்தில் அடிதடிக் கலா­சாரம் உரு­வா­கி­யுள்­ளது. இது நிறுத்­தப்­ப­ட­வேண்டும். மாண­வர்­க­ளான நீங்கள் நல்­ல­வர்­க­ளா­கவும் பண்­புள்­ள­வர்­க­ளா­கவும் வாழ­வேண்டும். ஆசி­ரி­யர்­க­ளுக்கு கீழ்ப்­ப­டிந்து வாழ்­வதன் மூலமே உயர்ந்த நிலையை அடை­ய­மு­டியும்

இன்­றைய நற்­செய்­தியில் நீங்கள் உல­கத்­திற்கு உப்பாய் இருக்­கி­றீர்கள். உல­கிற்கு நீங்கள் ஒளி­யாக இருக்­கி­றீர்கள். இந்த வச­னங்கள் ஊடாக வாழ்வு மற்றும் பணிகள் தொடர்­பாக கூறப்­பட்­டுள்­ளது. உப்பு தொடர்பில் உண­விற்கு ருசியைத் தரு­கின்­றது. உப்­பில்லாப் பண்டம் குப்­பை­யிலே என்­பார்கள். ஆகவே அள­வோடு பயன்­ப­டுத்­த­வேண்டும்

ஒளி­யினை நாம் கீழ்­நோக்கி ஒரு­போதும் வைக்­க­மு­டி­யாது. ஒளியை உய­ரத்தில் வைப்­பதன் மூலமே அவ்­விடம் முழுவதும் ஒளி கிடைக்கும். அது­போல்தான் எமது வாழ்வும் பிற­ருக்கு பயன்­மிக்­க­தாக காணப்­ப­ட­வேண்டும்

மாண­வர்­களின் பிர­தான கட­மை­யா­னது கல்வி கற்பதாகும். இதனைத் திறம்படச் செய்யவேண்டும். அத்துடன் மாணவர்கள் அதிபர், ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிந்து கற்பதன் மூலமே உலகிற்கு பயன்மிக்கவராக மிளிர முடியும் எனத் தெரிவித்தார்

Related posts: