அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மீன் வகைகள் திடீர் என உயிரிழப்பு!

Sunday, March 19th, 2023

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் மினின்டீ என்ற நகரத்தில் உள்ள ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன் வகைகள் திடீர் என உயிரிழந்தன.

ஆயிரக்கணக்காண மீன்கள் உயிரிழந்த நிலையில் ஆற்றில் மிதப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாலிங்-பாக்கா ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெப்பநிலை மாற்றம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மனிதர்களால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல், காலநிலை கடுமையாக மாற்றம் அடைவதே இந்த அனர்த்தத்திற்கான முக்கிய காரணம் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அனர்த்தம் காரணமாக அவுஸ்திரேலியாவின் முக்கிய நதியின் இரு மருங்கிலும் வாழும் சுமார் 500 பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: