அவசியம் என்றால் நாளைய தினமே புதிய அரசாங்கத்தினை உருவாக்குவேன் – ஜனாதிபதி
 Sunday, July 30th, 2017
        
                    Sunday, July 30th, 2017
            தேவையேற்படின் நாளைய தினமே புதிதாக ஓர் அரசாங்கத்தை அமைக்க முடியும். என்றாலும் அசுத்தமான அரசாங்கத்தினை அமைக்க நான் தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுச் சபை கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த அரசாங்கம் தூய்மையின்றி காணப்பட்டதாலேயே அதிலிருந்து தான் விலகவேண்டிய நிலையேற்பட்டது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதுள்ள அரசாங்கம் தூய்மையற்றது என்றால் அந்த இடத்தில் தன்னால் இருக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் என்றால் அது தூய்மையான அரசாங்கமாகவே காணப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தும் பணிகள் ஆரம்பம்!
தமிழ் அரசியல்வாதிகள் சீனாவால் இந்தியாவிற்கு ஆபத்து என தெரிவித்து அச்சத்தை உருவாக்க முயல்கின்றனர் - ச...
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த  7 நாடுகளுக்கு இலவச விசா - அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        