அவசரகால பயன்பாட்டுக்கு கோவிஷீல்டுக்கு அனுமதி – இலங்கையின் முடிவிற்கு இந்தியா பாராட்டு!
Saturday, January 23rd, 2021
இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமையை வரவேற்பதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தடுப்பூசியை விநியோகிப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்பதாக கொவிஷீல்ட் தடுப்பூசியை அவசர நிலைமையில் பயன்படுத்த அனுமதித்தமையை, இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு தெரியப்படுத்தியிருந்தது.
இதற்கமைய இந்தியாவிலிருந்து தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டுவர இரு நாடுகளின் அதிகாரிகளும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
வெளிவிவகார அமைச்சின் அனைத்து அலகுகளையும் ஒரே கட்டடத்தில் நிறுவ நடவடிக்கை - வெளிவிவகார அமைச்சர் சமர்ப...
சீனாவிடம் இருந்து இலங்கைக்கு பல பில்லியன் உதவி கிடைக்கும் – பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக சீனாவ...
பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களின் அடைவுமட்டம் மிகவும் குறைவாக உள்ளது - வடமாகாண கல்வி அபிவிருத்...
|
|
|


