அவசரகால நிலை தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு கவலை!

Tuesday, April 28th, 2020

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இலங்கை உட்பட்ட பல நாடுகள் அவசரக்கால நிலையை பிரகடனம் செய்திருப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செய்ல் பெச்சலெட் இது தொடர்பில் குரல் கொடுத்துள்ளார்.

அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி காவல்துறையினர் பலரை கைதுசெய்துள்ளனர். கென்யாவில் 20பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக அவசரகால நிலையை ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் என்று பெச்செலெட் கோரியுள்ளார்.இலங்கை உட்பட்ட சுமார் 80 நாடுகள் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்காக அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக மிச்செய்ல் பெச்சலெட் தெரிவித்துள்ளார்

Related posts: