அழகு சாதன பொருட்களுக்கும் விரைவில் சட்டமூலம்!
Sunday, September 25th, 2016
அழகு சாதன பொருட்களுக்கான ஒழுங்கமைப்பு சட்டமூலம் ஒன்றை வெகு விரைவில் கொண்டு வரவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவ விநியோக பிரிவின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் கமல் ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சந்தைகளில் தற்போது தரங்குறைந்த அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோரை பாதுகாக்கும் தேசிய இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அந்த இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இவ்வாறான அழகு சாதன பொருட்கள் தொடர்பில் பொது மக்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை காணப்படவில்லை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா...
புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை பொதுமக்களுக்க அறிவுறுத...
தமிழர்களுக்குத் தீர்வு வழங்க ராஜபக்சக்கள் தயாராகவே இருந்தார்கள் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே பின...
|
|
|


