அலுவலக பணிகளை மட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள்!
 Wednesday, April 20th, 2022
        
                    Wednesday, April 20th, 2022
            
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக அலுவலக நாட்கள் மற்றும் களப்பணிகளை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அந்த சங்கம் அரச சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மாத்திரம் அலுவலகம் மற்றும் களப்பணிகளில் ஈடுபடவுள்ளதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னர் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் அலுவலக செயற்பாடுகளிலும் திங்கள் கிழமை பொதுமக்கள் தினமாகவும் கிராம சேவகர்கள் பணியாற்றியிருந்தனர்.
எனினும் தற்போதைய சூழ்நிலையில் திடீர் மரணங்கள், அனர்த்தங்கள் போன்ற களப்பணிகள் வழமை போன்று செயற்பட்டு வருவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        