அறிவித்தப்படி 8 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும் – படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ அறிவிப்பு!

Saturday, June 5th, 2021

நாடு முழுவதும் நடமாட்டத்தடை அமுலில் உள்ள போதிலும் தீர்மானிக்கப்பட்டவாறு எதிர்வரும் செவ்வாய்கிழமை நாடாளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெறும் என படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வை நடத்தும் விடயம் குறித்து ஊடகங்கமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்பதாக கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்வரும் 8 ஆம் திகதி வரையில் விவாதம் ஒத்திவைக்கப்பட்டமையினால் அன்றையதினம் கூட்டத்தொடர் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்வரும் 9, 10, மற்றும் 11 ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்துவது தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற செயற்குழு கூடவுள்ளது.

குறித்த கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் எதிர்வரும் திங்கட் கிழமை முற்பகல் 9.30 அளவில் இடம்பெறவுள்ளது எனவும் படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ மேலும் தெரிவிதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: