அறிகுறி தெரியாது : கொரோனா தொற்றியிருக்கும் – பெற்றோர்களுக்கு விசேட அறிவிப்பு!

நோய் அறிகுறி தென்படாத சிறுவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்க கூடும் என சிறுவர்களுக்கான நோய் தொடர்பான விஷேட நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக வைரஸ் தொற்றக் கூடும் என்ற அச்சம் உள்ள பின்னணியில் அது தொடர்பில் சிறார்கள் மற்றும் தாய்மார் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின் அரசாங்கம் கூறிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
விசேடமாக பெற்றோர் தங்களுது பிள்ளைகளை பொது இடங்களுக்கு காவிச் செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறும் சிறுவர்களுக்கான நோய் தொடர்பான விஷேட நிபுணர் தீபால் பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 9-ஆவது துணைவேந்தர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
நாட்டில் நாளாந்தம் 140 தொன் ஒக்சிஜன் தேவை - இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க சு...
எல்லை தாண்டும் இந்திய மீனவர் விவகாரம் - தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் - வடக்க...
|
|