அறநெறி பாடசாலைக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!
Wednesday, August 10th, 2016
தெல்லிப்பளை தந்தை செல்வாபுரம் கன்னிவளவு பிள்ளையார் அறநெறி பாடசாலைக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் பாடசாலை தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த அறநெறி பாடசாலை நிர்வாகத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த தளபாடங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இன்றையதினம்(10) நடைபெற்ற வைபவத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) அறநெறி பாடசாலை நிர்வாகத்தினரிடம் குறித்த பொருட்களை வழங்கிவைத்துள்ளார். இந்நிகழ்வில் கட்சியின் வலி தெற்கு நிர்வாக செயலாளர் வலன்ரயன் உடனிருந்தார்.

Related posts:
அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி: பரீட்சைகள் திணைக்களம்!
நாடாளுமன்ற தேர்தலுக்காக 18 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நிறைவு!
திறைசேரியால் யதார்த்தமற்ற முறையில் அதிக வருவாய் மதிப்பீடுகள் நாடாளுமன்றுக்கு காட்டப்பட்டுள்ளன – மத்த...
|
|
|


