அரியாலை முள்ளி பகுதி மக்களது வாழ்வாதார நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!
Saturday, February 4th, 2017
அரியாலை முள்ளிப்பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகச் செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் குறித்த பகுதி மக்களது நிலைமைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்தறிந்துள்ளார்.
நேற்றையதினம் (03) குறித்த பகுதிக்கு சென்ற இரவீந்திரதாசன் மக்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டதுடன் அவர்களது பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டார்..
இதன்போது குறித்த பகுதி மக்கள் தமது பகுதியிலுள்ள வீதிகள் புனரமைக்கப்படாமையால் தாம் போக்குவரத்து பிரச்சினைகளில் பல சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் தொழில் வாய்ப்பின்றி பலர் இருப்பதாகவும் தெரிவித்ததுடன் தமது பகுதியில் வாழும் பலர் மிக வறியவர்களாக இருப்பதனால் சுயதொழில் வாய்ப்புகளுக்கான உதவிகளை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
மக்களது கோரிக்கைகளை ஆராய்ந்து கொண்ட அம்பலம் இரவீந்திரதாசன் மேற்குறித்த கோரிக்கைகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு தீர்வுகளைப் பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


