அரியாலை உதயபுரம் பகுதியில் பேருந்து தரிப்பிடம் – துறைசார் அதிகாரிகள் கள விஜயம்!

அரியாலை தென்கிழக்கு உதயபுரம் பகுதியில் பேருந்து தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர்.
அதிகளவான மக்கள் வாழும் நிலையிலும் கடற்கரை பகுதியாக காணப்படும் குறித்த அரியாலை தென்கிழக்கு உதயபுரம் பகுதிக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் சேவையை மேற்கொள்ளாத நிலையில் தற்போது அது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி அனுமதி பெறப்ப்ட்டுள்ள நிலையில் குறித்த பேருந்து தரிப்பிடம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடற்கரை பிரதேசமாக காணப்பட்டதால் குறித்த பகுதியில் வாழ்ந்த நலன்பிரும்பி ஒருவரின் நிதிப் பங்களிப்பில் பேருந்து நிலைய அமைப்பதற்கு கடற்றொழில் திணைக்களத்திடம் குறித்த தரிப்பிடத்தை அமைப்பதற்கான அனுமதி கோரப்பபட்டிருந்த நிலையில் கடற்றொழில் திணைக்கள அதிகாரி குறித்த பகுதிக்கு சென்று அமைவிடம் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
இந்த கள விஜயத்தின்போது கடற்றொழில் திணைக்கள அதிகாரியுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசன் உள்ளிட்ட சிலரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|