அரிசி விலையில் மாற்றம் – வர்த்தக அமைச்சர் அறிவிப்பு!
Thursday, July 29th, 2021
அரிசி விலைகளை இந்த வாரத்தில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தெர்டர்பில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசியை 88 ரூபா என்ற சில்லறை விலைக்கு நுகர்வோருக்கு சதொச ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசியை 92 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் நாட்டரிசியை 97 ரூபா என்ற விலைக்கும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கட்டுப்பாட்டு விலையை மீறும் மருந்தகங்களுக்கு எதிராக சுற்றிவளைப்பு
ஜனாதிபதியின் தீர்மானங்களை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை அடக்கு முறை என கூறமுடியாது - பொது மக்கள் பாதுகாப்ப...
|
|
|


