அரிசி வகைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் – மீறினால் நட்ட நடவடிக்கை – நுகர்வோர் அதிகார சபை எச்சரிக்கை!

Saturday, April 11th, 2020

நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையைவிட அதிகமான விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களை கண்டுபிடிப்பதற்கான சுற்றிவளைப்புகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அரிசிக்கான நிர்ணய விலை நேற்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஒரு கிலோகிராம் கீரிசம்பா அரிசி 125 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளை அல்லது சிவப்பு சம்பா மற்றும் கெக்குலு சம்பா என்பன ஒரு கிலோ 90 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் நாட்டு அரிச 90 ரூபாவுக்கும், வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி ஒரு கிலோகிராம் 85 ரூபாவுக்கும் விலை நிரி;ணயம் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையிலேயே அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பபளர் அசேல பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: