நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு உறுதியுடன் இருக்கின்றேன் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!.

Thursday, December 3rd, 2020

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்து, அதன் செயற்பாடுகளை அரசியல் மற்றும் வேறு தலையீடுகளிலிருந்து நீக்குவதற்கு நான் உறுதியுடன் இருப்பதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 1978 முதல் மாறாமல் உள்ளது. மேல் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் கடந்த காலங்களில் பலமுறை விவாதிக்கப்பட்டாலும், அது 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாறாமலே உள்ளது.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்துடன் இந்த நீண்டகால தேவையை எமது அரசாங்கத்தினால் பூர்த்தி செய்ய முடிந்ததமை பெருமை அளிக்கிறது என்பதனை நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட நீதிபதிகளின் முன்பாக நான் குறிப்பிட்டேன்.

சட்டத்தின் தாமதங்களே பிரச்சினைகள் நீடிப்பதற்கான மற்றும் நீடித்த பிரச்சனைகளுக்கான முக்கிய காரணங்களுள் இரண்டு ஆகும். “தாமதிக்கின்ற நீதியினால் நீதி பறிக்கப்படுகிறது” என்று ஒரு பழமொழி உண்டு.

20 ஆவது திருத்தம் ஆனது நீதி நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்று கூறினார்.

நீதியை, வினைத்திறனாக நிர்வகிப்பது ஆனது சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவது மட்டுமன்றி, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதது ஆகின்றது.

நீதியை வழங்குவதற்கான செயன்முறைகள் ஆவன – நம்பகமான, வினைத்திறனான மற்றும் பயனுள்ள முறையில் பிரச்சினைகளைத் தீர்த்து தேசத்தின் முன்னேற்றத்திற்கு வளம் சேர்க்கும் என்ற நம்பிக்கையையும் என்க்குள்ளது.

அத்துடன் வலுவான, வினைத்திறனான மற்றும் சுயாதீனமான நீதி அமைப்பின் முக்கியத்துவத்தை அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது. அதன் திறனை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அதரசாங்கம் ஆழமான புரிதலைக் கொண்டுள்ளது.

நீதிச் செயற்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டுமென்றால், அந்தச் செயல்முறை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தியுள்ளேன் என்றுமு; அவர் மேலும் தெதரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: