அரிசி தேங்காய் போன்று உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் எரிபொருள் விலைகளை குறைக்க முடியாது – நிதிய அமைச்சர் சுட்டிக்காட்டு!
Sunday, July 25th, 2021
அரிசி தேங்காய் போன்று எரிபொருள் விலைகளை குறைக்க முடியாது என அமைச்சர் பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் அரிசி தேங்காய் போன்றவற்றின் விலைகளை குறைப்பது இலகுவானது.
அதேபோன்று எரிபொருள்களின் விலைகளை உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் குறைக்க முடியாது எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலைமையில் எனக்கு எரிபொருள் விலைகளை குறைக்க விருப்பம் தான். ஆனால் இது வெளிநாடுகளுடன் தொடர்புபட்ட விடயம் என்பதால் அதை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
அதேநேரம் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் 6000 பேர் பணியாற்றுகின்றனர் ஆனால் ஒபேக்கில் 300 பேரே பணியாற்றுகின்றனர் எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் உள்விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையில்லை! ரஷ்யா!
இலங்கையின் கொரோனா கட்டுப்பாட்டு திட்டங்களுக்கு உலக நாடுகளின் தூதுவர்கள் பாராட்டு!
மாகாணத்தின் மீது அக்கறைகொண்ட தலைவர்களே மக்களுக்குத் தேவை - ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!
|
|
|


