அரிசி இறக்குமதியை தனியார் துறையினர் முன்னெடுக்கவுள்ளனர்!

மியன்மார், பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்தியுள்ளதாகவும் பாரியளவான நிதி தேவைப்படுவதால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அரசாங்கம் தெரிவித்தள்ளது.
இதனால் குறித்த நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் தனியார் துறையினர் முன்னெடுக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்தது.
அரிசி இறக்குமதியாளர்களால் 50,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் காலத்தில் 100 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரிசி இறக்குமதியாளர் சங்கம் உறுதியளித்துள்ளது.
Related posts:
சர்வதேச நாணய நிதியத்தின் திடீர் தீர்மானம்!
யாழ் மாநகர முதல்வரது விடுமுறை தொடர்பில் குழறுபடி: விடுமுறைக் கடிதம் ஏற்றுக்கொள் முடியாது என யாழ் மாந...
பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை திறப்பது தொடர்பில் சுகாதார தரப்பினருடன் பேச்சுவார்த்தை - கல்வி அம...
|
|