அரிசியை நிர்ணய விலையில் விற்க முடியும் என இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!
Saturday, February 11th, 2017
அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள நிர்ணய விலைக்கு அமைய அரிசியை விநியோகிக்க முடியும் என்று அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிகால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அரிசிக்கான நிர்ணய விலை அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் கடந்த 8ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்டது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை 80ரூபா எனவும் நாட்டரிசியின் விலை 72ரூபா எனவும் அரசு அறிவித்திருந்தது. ஒரு கிலோகிராம் பச்சை அரிசி 70ரூபா என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:
டெங்கு நோயைக் கட்டுப்படுத்த சுகாதாரப்பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய வர்த்தகர்கள் குறித்த விசாரிக்க விசேட பிரிவு!
அரசாங்கத்திலிருந்து அரசாங்கத்திற்கு சாத்தியமான கொள்முதல் பொறிமுறையின் அடிப்படையில் சுகாதாரத் துறையில...
|
|
|


