அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு!
Saturday, June 24th, 2017
அரசாங்கம் 3 இலட்சம் தொன்னுக்கும் 5 லட்சம் தொன்னுக்கும் இடைப்பட்ட அளவிலான அரிசியை இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளதாக தாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சிந்தக்க எஸ்.லொக்குஹெற்றி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவினக் குழுக்கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தையில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுப்பதும் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் இதன் நோக்கமாகும் என்றும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்சதொச மற்றும் கூட்டுறவு பிரிவின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. தற்சமயம் ஒரு கிலோ சம்பா அரிசி சந்தையில் 90 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சம்பா அரிசி 80 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதோடு ஒரு கிலோ நாட்டரிசி 72 ரூபாவாகும்.
தனியார் துறையும் அரிசியை இறக்குமதி செய்கிறது. அரசாங்கம் முன்மொழிந்துள்ள விலைக்கு அரிசியை விற்பனைசெய்ய முடியாது என தனியார் துறையினர் கூறினாலும், அரிசியின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சின் செயலாளர் கூறினார்.
Related posts:
|
|
|


