அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்கம் – ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதிக்கும் அமைச்சரவை அங்கீகாரம்!

அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கும் அரிசி இறக்குமதிக்கு வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்..
இதனடிக்கடையில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உள்நாட்டு சந்தையில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட அரிசி தட்டுப்பாட்டை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பால் மா, சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசியல் பழிவாங்கல்கள் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!
விரைவில் வவுனியா மாவட்டத்தில் பி.சிஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் - ஈ.பி.டி.பி.யின் வன்னி மாவட்ட ...
அட்டுலுகம சிறுமி கொலைச் சம்பவம் தொடர்பில் விரைவில் நீதி கிடைக்கும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதி...
|
|