அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை தற்காலிக நீக்கம்!
Wednesday, August 16th, 2017
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயத்தை தற்காலிகமாக நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் அரிசி இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதையடுத்து அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை தற்காலிகமாக நீக்குவது என்றும் அதன் மூலம் கிடைக்கும் பலாபலன்களைப் பார்த்து சில மாதங்களின் பின்னர் உறுதியான முடிவு எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமையினால் அரிசியை இறக்குமதி செய்பவர்களின் தொகை குறைவடைந்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்தே குறித்த இந்த விலை நிர்ணயத்தை தற்காலிகமாக நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
வேலணை ஐயநார் வித்தியாலயத்தில் காள்கோள் விழா!
தேசிய டெங்கு ஒழிப்பு விஷேட வேலைத்திட்டம் ஆரம்பம்!
பொதுமக்களும் சுகாதார பாதுகாப்பு தொடர்பில், அவதானம் செலுத்த வேண்டும் - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ...
|
|
|


