அரச வெசாக் தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் – ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பு என இராணுவ தளபதி தெரிவிப்பு!
Tuesday, April 13th, 2021
அரச வெசாக் தின நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவதளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அரச வெசாக் தின நிகழ்வை முன்னிட்டு நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வெசாக் நிகழ்வுகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அதற்கு மேலும் காலம் இருப்பதாகவும் புத்தாண்டு காலத்தை கொண்டியதன் பிரதிபலனை மே மாத முதல் பகுதியில் அறிந்து கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைமின்சார சபைக்கு புதிய தலைவர்!
வடக்கின் உணவுகளில் விலைகள் திடீர் அதிகரிப்பு - பொதுமக்கள் பெரும் சிரமம்!
யாழ்ப்பாணத்தில் உள்ள 03 தீவுகளில் ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந...
|
|
|


