அரச வாகனங்களை பயன்படுத்த தடை – தேர்தல்கள் ஆணைக்குழு!

Thursday, December 28th, 2017

ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 02 வாகனங்களைத் தவிர வேறு எந்த அரச வாகனங்களும் தேர்தல் காலங்களில் பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அவர்களின் அலுவலக பணியாளர்கள் அல்லது வேறு எந்த நபரோ அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளின் பொறுப்பு எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய பதிவு செய்யப்பட்ட இலக்கங்களுடன் அரச வாகனங்களைப் பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பான அறிவுரைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்காக விமானங்கள், ஹெலிகொப்டர்கள் என்பவற்றைப் பயன்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

இந்தியா மற்றும் மாலைதீவுகளுடன் கடல்சார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு செயலகம் கொழும்பில் ...
குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் அடுத்தவாரம் கைச்சாத்து - லிட்ரோ நிறுவனம் அறி...
ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் - நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு பதவியில் இருந்து விலகப் ப...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய தனியார் வகுப்புக்களை நடத்த எதிர்வரும் செவ்வாய் நள்ளிரவுமு...
நாடாளுமன்ற செயற்பாடுகளை இடைநிறுத்தி விவாதத்திற்கு எடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா ப...
அமைச்சர் டக்ளஸ் முயற்சி - ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட காணிகளில் 20...