அரச வாகனங்களின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு – திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து பிரதானிகளும் அறிவுறுத்து!
Sunday, February 12th, 2023
அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் கையிருப்பிலுள்ள வாகனங்களை பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறு திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து பிரதானிகளும் அறிவித்துள்ளார்.
இயன்றளவில், நிகழ்நிலை (ஒன்லைன்) ஊடாக கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலம் போக்குவரத்துத் தேவைகள் ஏற்படுவதை மட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறே, வலய, பிரதேச மற்றும் உப அலுவலகங்கள் மூலம் எளிதில் ஈடுசெய்யக்கூடிய கடமைகள் மற்றும் சேவைகளுக்காக, உரிய அமைச்சுகளின் ஊடாக போக்குவரத்து வசதிகளுக்காக செலவிடுவதனை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பருத்தித்துறை மீன்பிடி துறைமுகம் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் இறுதி முடிவு!
அடைமழை தொடரும் - அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!
உயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை - சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு...
|
|
|


