அடைமழை தொடரும் – அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!

Tuesday, September 24th, 2019


நாட்டில் பல பகுதிகளிலும் இன்றும் இரவு வரையான காலப் பகுதியில் கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடல் அலைகளின் வேகம் அதிகமாக காணப்படலாம் எனவும் கடலில் மீன் பிடிக்கச் செல்பவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்து சில தினங்களுக்கு நீடிக்குமெனவும் திணைக்களம் முன்னறிவிப்புச் செய்துள்ளது. இதற்கமைய நாட்டின் தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் இன்றும் 200 மில்லிமீற்றரிலும் அதிக மழை பெய்யுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று பெய்த அடைமழையினால் காலி வந்துரம்ப பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் 42 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து அதிக மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மண்சரிவு இடம்பெறக்கூடுமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஐந்து மாவட்டங்களுக்கு நேற்றையதினம் எச்சரிக்கை விடுத்தது. அதனடிப்படையில் களுத்துறை, கேகாலை, காலி, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: