அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் மாணவர்களுக்கு இன்றுமுதல் விடுமுறை!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான முதல்கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம், எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகுமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இதனிடையே கொரோனா பரவல் காரணமாக பிற்போடப்பட்ட கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் 10ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இதனால் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகளை இரண்டு கட்டங்களாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை!
பிரதேச செயலக பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்படவேண்டும் - அமைச்சர் வஜிர அபேவர்த்தன!
கொரோனா தொடர்பில் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 2 ஆவத...
|
|