அரச பேருந்துகளுக்கும் இணையத்தளம் ஊடாக ஆசன முன்பதிவு செய்யலாம் – நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தகவல்!
Thursday, March 16th, 2023
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் நீண்ட தூர பயணங்களுக்காக இணையத்தளம் வாயிலாக ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.
அத்துடன், sltb.express.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் வாயிலாக நெடுந்தூர பயணங்களுக்கான ஆசன முன்பதிவினை மேற்கொள்ள முடியும்.
1315 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் வாயிலாகவும் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
டெங்கு நோயால் 60 பேர் பாதிப்பு - கட்டுப்படுத்த பருத்தித்துறையில் தீவிர நடவடிக்கை!
பெற்றோருக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு!
கொரோனா அச்சுறுத்தல்: பேருந்துகளில் நடமாறும் விற்பனை நடவடிக்கைகளுக்குத் தடை - இலங்கை போக்குவரத்து சபை...
|
|
|


