அரச பரீட்சைகளில் அமைச்சரினால் புள்ளிகளை மாற்ற முடியாது – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
Thursday, July 6th, 2023
எமது நாடு இரண்டு தாய் மொழிகளையும் பயன்படுத்தும் மக்கள் வாழும் நாடு என்பதால் மொழிபெயர்ப்புத் துறையில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்,
அலரி மாளிகையில் இடம்பெற்ற அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவை பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவையில் நியமனம் வழங்கும் நிகழ்வில் கந்துகொண்டு உ ரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எழுத்து மொழியைப் போன்றே நாம் பேசும் மொழியும் பல்வேறு பிரதேசங்களுக்கு ஏற்ப உச்சரிப்பு மாறுபடுகிறது. இதுபோன்ற அனுபவங்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் உங்களுக்கு கிடைக்கும்.
தமிழ் மொழிப் பகுதிகளைப் பொறுத்து, கிழக்கு மாகாணம், வட மாகாணம், மலையகம் போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் உச்சரிப்புகள் வேறுபடுகின்றன. படிப்படியாக மொழியை ஒன்று போல உச்சரிக்கும் காலகட்டத்திற்கு நாம் வந்துகொண்டிருக்கிறோம். அரசாங்க சேவையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் மொழிபெயர்க்கும் இயலுமை உள்ளவர்கள் இருக்க வேண்டும்.
அதில் குறைபாடு இருப்பின் அதனை நிறைவேற்றுவதற்கு பொது நிர்வாக அமைச்சு என்ற வகையில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். என்றாலும் அரசாங்க பரீட்சைகளின் புள்ளிகளை அமைச்சரினால் மாற்ற முடியாது என்பதை நான் பணிவுடன் தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


