அரச நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் விசாரணை – கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன தெரிவிப்பு!

அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கக்கடவுள்ளன.
அதற்காக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
பதிவு செய்யப்பட்டதற்கு இணங்க வாகனங்கள் அரச நிறுவனங்களின் வசமுள்ளனவா? அல்லது குறித்த வாகனங்கள் உரிய வினைத்திறனுடன் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து பரிசீலிக்கப்படவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் மட்டத்தில் தனித்தனியாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆதாரங்களை சமர்ப்பிக் வந்தேன், விசாரணையே நடைபெறவில்லை: வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் குற்றச்சாட்ட...
இலங்கை , மாலைதீவுகளுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் நியமனம்!
இரட்டை குடியுரிமை உள்ளவர்களுக்கு அரசாங்கத்தில் எந்த பிரதான உயர் பதவிகளும் வழங்கப்பட கூடாது - ஶ்ரீல...
|
|