அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் நாளைமுதல் ஆரம்பம் – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!
Sunday, March 14th, 2021
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் நாளை திங்கள்கிழமைமுதல் ஆரம்பமாக உள்ளதாக குறித்த அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் குறித்த வேலைத்திட்டத்தினூடாக அரச நிறுவனங்களில் இடம்பெறும் தவறுகளை குறைத்து, பொதுமக்களுக்கு செயல்திறன் மிக்க சேவையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டத்திம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள குறித்த செயற்றிட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவம் தெரிவித்துள்ள உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்தப் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 28 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் இல்லாமற் போகும்.
இலங்கை அரசாங்கத்தின் மொத்த சொத்து மதிப்பு!
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 09, 10, 12ஆம் திகதிகள...
|
|
|


