அரச நிறுவனங்களுக்கான புதிய கட்டட நிர்மாணப் பணிகளை ஒத்திவைக்க தீர்மானம் – நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவிப்பு!
Wednesday, September 9th, 2020
அடுத்த இரண்டு வருடங்களுக்கு அரச நிறுவனங்களுக்கான புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் அனைத்து இராஜாங்க அமைச்சின் செயலாளர்களுக்கும் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், நிர்மாணப்பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள கட்டடங்கள் தொடர்பில் திறைசேரிக்கு அறிவித்து அதற்கான நிதியை ஒதுக்கிக்கொள்ள முடியும் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் வரவேற்பு !
கொரோனா வைரஸ்: பாடசாலை மாணவர்களை பாதுகாக்க கல்வி அமைச்சு விஷேட நடவடிக்கை!
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் – அரச தலைவர் ரணிலுக்கு பாரத ப...
|
|
|


