அரச நிறுவனங்களில் நிரந்தர வேலை: பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் தீர்மானம்!

நாட்டிலுள்ள அரச நிறுவனங்களில் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளின் தொழிலை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பில் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
நிரந்தர அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகள் 180 நாட்கள் தொடர்ச்சியான சேவையை முடித்து தேவையான கல்வித் தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பொலிதீன் பாவனைக்கு எதிரான சட்ட நடவடிக்கை - மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை!
கரையோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது - இராணுவத் தளபதி அறிவிப்பு!
ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
|
|