அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பில்!

அரச தாதி உத்தியோகத்தர் சங்கமானது இன்று(13) தொடக்கம் 48 மணி நேர அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(12) இடம் பெற்ற போதே மேற்குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக கொடுப்பனவு மற்றும் வேதன கொடுப்பனவு உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த பணிப்புறக்கணிப்புக்கு அரச தாதிமார் சங்கம் ஆதரவு வழங்க போவதில்லையென தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீன்பிடிக்க சில மணி நேரம் கூட அனுமதிக்கமாட்டோம்.! - அமைச்சர் மஹிந்த அமரவீர!
யாழில் தொடர்ந்தும் துஸ்பிரயோகங்கள் : அச்சத்தில் பெற்றோர்!
நீங்கள் ஏமாற்றப்படலாம் - பொதுமக்களுக்கு பொலிசார் அவசர எச்சரிக்கை!
|
|