அரச ஊழியர்கள் 4 மணித்தியாலங்களே பணியில் ஈடுபடுகின்றனர் – கணக்காய்வாளர் நாயகம்!

Tuesday, February 7th, 2017

நாட்டில் அரச ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு நான்கு மணித்தியாலங்களே பணியில் ஈடுபட்டு வருவதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரச ஊழியர்கள் நான்கு மணித்தியாலங்கள் மட்டுமே கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஐந்து மணித்தியாலங்களாக உயர்த்தப்பட்டால் மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்ற முடியும். கொழும்பு மாநகரசபையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் எந்தவித பணியிலும் ஈடுபடாது வெறுமனே சம்பளம் பெற்றுக் கொள்கின்றனர்.

வரவுப் பதிவு புத்தகத்தில் காலையில் வந்து கையொப்பமிட்டதாக தகவல்கள் காணப்படுகின்ற போதிலும், அரச ஊழியர்கள் நான்கு மணித்தியாலங்களே கடமையாற்றுகின்றனர். ஐந்து மணித்தியாலங்கள் வரையில் கடமையாற்றினால் வெற்றியளிக்கும். சிலர் பத்து ரூபா நலனுக்காக நாட்டக்கு பல கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றனர்.

நீண்ட காலமாக இந்த விடயங்கள் நடைமுறையில் உள்ளன. குப்பை பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Gamini-Wijesinghe-300-seithy

Related posts: