அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிரூபம் வெளியானது – அலுவலகங்களில் கூட்டங்கள் மற்றும் தொடர்புகளை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்து!

Friday, October 1st, 2021

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அரச துறை ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது, வாடிக்கையாளர் சேவைக்கான மின்னணு முறைகளைப் பின்பற்றுவது, பாரிய குழுக்களை அழைப்பதற்குப் பதிலாக சேவைகளை வழங்குவதற்கான திகதிகள் மற்றும் நேரங்களை வழங்குதல் மற்றும் நாணயங்களின் பரிமாற்றத்தைக் குறைக்க ஏனைய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் ஆகியவை இதன் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் அலுவலகங்களில் கூட்டங்கள் மற்றும் தொடர்புகளை குறைக்க வேண்டும் என்றும் சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சுகாதார காரணங்களுக்காக கூட்டங்களின் போது சிற்றுண்டி மற்றும் தேநீர் விநியோகம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: