அரச ஊழியர்களுக்கு போனஸ் வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி!
Wednesday, December 12th, 2018
அரசாங்க ஊழியர்களுக்கான போனஸ் கொடுப்பனவுகளை தாமதமின்றி பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி செயலத்தில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் , தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
ஜனாதிபதி யாழ்ப்பாணம் விஜயம்!
பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க தடை - பொலிஸார் அறிவிப்பு!
ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் தொடர்பில் அதிக அக்கறை காட்டுமாறு அரச மருத்துவ ...
|
|
|


