அரச ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க மலேசிய பூரண ஆதரவு!
Monday, May 15th, 2017
அரச சேவை முகாமைத்துவத்தை பலப்படுத்த மலேசிய அரசாங்கம் பூரண ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக்கிற்கும் இடையில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது மலேசிய பிரதமர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
சீனத் தலைநகர் பீஜீங்கில் நேற்று இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது மலேசிய பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.அரச ஊழியர்களுக்கு பயிற்சிகளை வழங்க மலேசிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.இருநாடுகளுக்கும் இடையில் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவதன் மூலம் இரண்டு நாடுகளும் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
பொருட்களின் விலைகள் உயர்வடையாது!
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டத்தை தக்கவைக்க வேண்டும் - தலைக்கு மேல் தொங்கும் வாளுக்கு இலங...
இலங்கைக்கு உதவுவதற்கு சீனா தயாராகவே உள்ளது - சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியான் தெரிவி...
|
|
|


