அரச ஊழியர்களுக்கான வெள்ளிக்கிழமை விடுமுறை அடுத்த வாரம்முதல் அமுலுக்கு வரும் – பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவிப்பு!
Monday, June 13th, 2022
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வெள்ளிக்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பிரச்சினை மற்றும் பொருளாதார நெருக்கடிகளையடுத்து அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது. இதற்குஅமைய இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வருகிறமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
சட்டத்திற்கு முரணாக வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை!
பாரியளவிலான இயற்கை உர உற்பத்தியில் அம்பாறை பெருந்தோட்ட நிறுவனம் – 25 கிலோ இயற்கை உரம் 25 ரூபா வீதம் ...
பொருளாதார நெருக்கடியால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் சிறுவர்களை பாதுகாக்குமாறு அரச மருத்துவ அதிகார...
|
|
|


