அரச அச்சகத் துறைக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கக் கோரி தேர்தல் ஆணையம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்!
Friday, February 17th, 2023
அரச அச்சக திணைக்களத்திற்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கடிதம் பொலிஸ் மா அதிபருக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
திணைக்களத்திற்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் உள்ளுராட்சி அதிகார சபைகளின் தேர்தல் அச்சடிக்கும் பணி தடைப்பட்டுள்ளதாக அரச அச்சுப்பொறியாளர் கங்கானி லியனகே புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முன்னெடுப்பதற்கு மேலதிக நிதியை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அரச அச்சுப்பொறி கோரியுள்ள நிலையில் இந்த கடிதம் அனுப்பட்டுள்ளது.
பணப்பற்றாக்குறையால் தபால் மூல வாக்களிப்பு முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளில் இடம்பெறாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.
000
Related posts:
|
|
|


